கொரோனா அச்சுறுத்தலால் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படாது - முதலமைச்சர்

0 3160

கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதால் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கொரோனா பரவும் சூழலில் பேரவையை நடத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது பரவி வரும் வைரஸ் அபாயகரமான நோய் தான் என்ற போதும் தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொண்டுவருவதாக கூறினார்.

பரிசோதனைக்கு பிறகு அனைவரும் அனுமதிக்கப்படுவதால், சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments