98 கொரோனா மாதிரிகளில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி - சுகாதாரத்துறை

0 83101

 தமிழகத்தில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 98 கொரோனா மாதிரிகளில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அதன் அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் மூலம் வந்த 18 ஆயிரத்து 62 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் 2221 பேர் வீடுகளிலும், 22 பேர் மருத்துவமனை சிறப்பு பிரிவுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சீனா, ஹாங்காங், கொரியா, இத்தாலி, ஈரான், ஃபிரான்ஸ், ஸ்பெயின் ஜெர்மனி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments