யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் காவல் நீட்டிப்பு

0 781

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக 8-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகளவு கடன் வழங்கியதாக ராணா கபூர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் முடிந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு நீண்ட கால ஆஸ்துமா, மன அழுத்த பிரச்சினை இருப்பதாக ராணா கபூர் தெரிவித்தார். இருப்பினும் அவரது காவலை 20ந் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments