கொரோனா அச்சுறுத்தலால் 2 தொழிற்சாலைகளை மூடுகிறது Ferrari

0 1376

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தாலியில் உள்ள தனது 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ஃபெராரி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசின் சுகாதார வழிமுறைகளின் படி மரனெல்லோ, மொடெனாவில் உள்ள தொழிற்சாலைகளை 2 வாரத்துக்கு மூடுவதாக ஃபெராரி கார் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தொழிற்சாலை மூடப்பட்ட நாட்களில் உற்பத்தி சாரா பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments