கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாவுக்கு தடை

0 610

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து அந்தமான-நிக்கோபார் தீவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எக்கோ டூரிசம், பீச் டூரிசம், படகு குழாம்கள், நீர் விளையாட்டு பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் 26 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தமான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே போன்று அங்குள்ள ஆதிவாசி மக்களுடன் கலந்து பழகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபலமான செல்லுலார் ஜெயில், ஹாவ்லோக் தீவு, நீல் தீவு, பாராடாங் உள்ளிட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் அடைக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments