திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்

0 81909

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 29 ம் தேதி திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விழைவதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதை, தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

எனவே வருகிற 29 ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments