கொரானா பரவலைத் தடுக்கச் சிறந்த வழி

0 3450

மக்கள் கூடும் இடங்களை முன்கூட்டியே மூடுதல், கடும் கட்டுப்பாடுகள் விதித்தல் ஆகியவைதான் கொரானா பரவலைத் தடுக்க இந்தியாவுக்குச் சிறந்த வழிகளாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரானா வைரஸ் பரவலைத் தடுக்க பிரான்ஸ் நாட்டில் கடைகளும் சுற்றுலா இடங்களும் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் இன்றியமையாச் சூழல் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுகாதார நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரானா பரவலைத் தடுப்பதற்கு, மக்கள் கூடுமிடங்களை முன்கூட்டியே மூடுதல், தூய்மையைப் பேணுவதற்கான கட்டுப்பாடுகள் ஆகியவை தான் சிறந்த வழிகளாக இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சிக்கான கவுன்சில், பொது சுகாதாரத்துக்கான இந்திய மையம் ஆகியவற்றின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments