ஈரானில் இருந்து இதுவரை 389 பேர் அழைத்து வரப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

0 607

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து இதுவரை 389 பேர் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று முறை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு ஜெய்சல்மேரில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

நான்காவது முறையாக 52 மாணவர்கள் ஒரு ஆசிரியர் என 53 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஈரான் அரசுக்கும் இந்திய தூதரகத்திற்கும் இதற்காக நன்றி தெரிவிப்பதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதனிடேயே பிரதமர் மோடிக்கு ஈரானின் மஹான் விமானப் போக்குவரத்து நிறுவனம் எழுதிய கடிதத்தில், இந்திய சகோதரர்களை வர்த்தக நோக்கமின்றி மனிதாபிமான உணர்வுடன் அழைத்துச் செல்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments