செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை விரட்டி பிடித்த பெண்

0 2151

சென்னை பெரம்பூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை தைரியத்துடன் இருசக்கரவாகனத்தில் விரட்டி பிடித்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

எம்.பி.ஏ. பட்டதாரியான நந்தினி, ரயில் நிலையம் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் மகனுடன் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

பழனி ஆண்டவர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்த அலாவுதீன் என்ற இளைஞன், நந்தினியின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலி பறித்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக சுதாரித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற நந்தினி, எதிரே வந்த வாகனத்தில் மோதி தவறி விழுந்த அலாவுதீனை பிடித்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் முதலில் குற்றத்தை மறுத்த அலாவுதீன் பின்னர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments