ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் புதிய சட்டத்தில் புதின் கையெழுத்து

0 1576

அதிபர் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

தற்போது 2ஆவது முறையாக அதிபர் பொறுப்பு வகித்து வரும் அவர் வருகிற 2024ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். ஆனால் அதிபர் பதவியில் 2 முறைக்கு மேல் இருக்க முடியாது என்பது ரஷ்ய நாட்டுச் சட்டவிதியாகும்.

இந்நிலையில் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி ஏற்கனவே தொடர்ச்சியாக 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments