ஏர் இந்தியா வருவாய் 20 சதவீதம் அதிகரிப்பு

0 773

ஏர் இந்தியாவின் வருவாய் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட ஒப்பீட்டளவில் வருவாய் அதிகரித்திருந்தாலும், செலவு குறையவில்லை என ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலா (Pradeep Sing Kharola) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கு புதிதாக தொடங்கப்பட்ட விமான சேவை மூலம் அதிக வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சேவைத் தரம் மேம்பாடே வருவாய் அதிகரிக்கக் காரணம் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் கரோலா கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments