கொரோனா வைரஸ் : பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் ஆலோசிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

0 5253

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்த சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று ஆலோசனையில் பங்கேற்க இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரசின் அச்சுறுத்தலை கூட்டு முயற்சியினால் முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பான சார்க் நாடுகளின் காணொலி ஆலோசனையில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்புக்கு இலங்கை , நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments