துப்புரவு பணியாளரான எம்.பி.ஏ. பட்டதாரி..!

0 3741

கோவையில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, சர்வதேச நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பி.இ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகளில், எம்.பி.ஏ. படித்த சையத் முக்தார் அகமது என்பவரும் ஒருவர்.

கோவையை சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் எம்.என்.சி. நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். அந்த பணியை உதறிவிட்டு, துப்புரவு பணியை கையில் எடுத்து, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றி வருகிறார்.

அரசு வேலையில் பணி நிரந்தரம், பாதுகாப்பு இருப்பதால், 35 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில், தனியார் நிறுவன வேலையை உதறி, தற்போது 16 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளதாக சையத் தெரிவித்தார்.

எந்த பணியும் இழிவானது இல்லை எனவும், இது மருத்துவர்களின் பணிக்கும் மேலானது என்ற மன நிறைவுடன் பணிபுரிவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments