ரஜினியின் அரசியல் முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா வரவேற்பு

0 1465

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் முடிவு குறித்து பாராட்டு தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா, தமிழ் சமூகத்துக்கு நன்மை பயக்கும் அவரது திட்டங்களை முழு மனதுடன் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமையன்று சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தாம் முதலமைச்சர் பதவிக்கு விருப்பப்படவில்லை என்று கூறியிருந்தார்.

ரஜினியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற ரஜினியின் நிலைப்பாடு அவர் பேராசையற்றவர் என்பதை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் நலன் சார்ந்து ரஜினியின் கொள்கைகள் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள பாரதிராஜா, தனது அரசியல் பிரவேசத்தின் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை அரசனாக அமர்த்துவேன் என்பதில் அவரது மனிதநேயம் வெளிப்படுவதாகக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments