4 பேரை கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு

0 939

தாம்பரம் அடுத்த பம்மலில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரை கொலை செய்த நபருக்கு, தூக்கு தண்டனை விதித்து  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளுவர் நகரை சேர்ந்த தாமோதரன் என்பவர் துணிக்கடை வியாபாரத்தில் நஷ்டப்பட்டதால், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவி தீபா, தாய் சரஸ்வதி மட்டுமின்றி ரோஷன், மீனாட்சி எனும் இரு குழந்தைகளையும் கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.

தொடர்ந்து, மாமனாருக்கு தகவல் அளித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தமோதரன்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் தாமோதரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments