தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்

0 4251

தமிழ்நாடு மாநில பாஜக புதிய தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், கடந்த செப்டம்பர் 1 ம் தேதியில் இருந்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவி, காலியாக இருந்தது.

43 வயது எல். முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். புதிய நியமனம் குறித்து, பாஜக மேலிட தலைவர்களுக்கு நன்றி கூறிய எல். முருகன், தமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகவும் சிறப்பாக செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக தலீத் சமூகத்தை சேர்ந்த டாக்டர் கிருபாநிதி, 2000ஆவது ஆண்டில் பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தலீத் சமூக தலைவர் ஒருவர், தமிழக பாஜகவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல். முருகனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments