திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வெற்றி பெற்றது செல்லும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

0 550

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சீதாபதி, 61,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதிமுக வேட்பாளரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், திமுக எம்.எல்.ஏ சீதாபதி பெற்ற வெற்றி செல்லும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments