காஷ்மீரில் தொழில் தொடங்க, தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு

0 2616

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொழில் துவங்க உகந்த சூழல் உருவாகி உள்ளதால், தொழில் துவங்க முன்வருமாறு, தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை - வேளச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் கேவல் குமார் ஷர்மா, மே மாதம் இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தகவல் - தொழில் நுட்பம், விவசாயம், தோட்டக்கலை, கல்வி, சுற்றுலா மேம்பாடு, உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் துவங்க, அதிக வாய்ப்பு உள்ளதாக கேவல் குமார் ஷர்மா பட்டியலிட்டார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments