மனிதனை மயங்குறச் செய்யும் இருவாச்சின் காதல் கதை

0 1167

மனிதர்கள் மட்டுமா காதலிப்பார்கள் ? இல்லை! மனிதனை தாண்டி ஒருகாதல் அது தான் இருவாச்சியின் காதல் கதை. எந்த விதமான புனைவு இல்லாமல் பறவைகளின் காதலை பற்றி எழுதவேண்டுமானால் அதற்கு இப்பறவையே உதாரணம் .ஒரு முறை இணை சேர்ந்துவிட்டால் இறக்கும் வரை பிரியாமல் வாழும் அதை பற்றிய செய்தி தொகுப்பு இதோ..

அடர்ந்த மலைக்காடுகளில் வசிக்கும் இப்பறவை காதலுக்கே உரித்தானது. மஞ்சள், வெள்ளை, கருப்புநிறங்களில் சற்றேபெரிய உருவம் கொண்டபறவையாக இருக்கும்.

காதலாகி கருவாகி இனப்பெருக்க காலத்தில் கூட தன் இணையை பிரியாமல் வாழ்வதே இப்பறவையின் தனிசிறப்பு. இதன் வாழ்வில் ஒருமுறை இணைசேர்ந்தால் அந்தஜோடி வாழ்நாள் முழுவதும் பிரியாது!...இணைசேர்ந்த பின் முட்டையிடுவதற்கு தகுந்த இடத்தைத் தேடும்போது ,மிக உயரமான மரத்திலுள்ள பொந்தையே தேர்வு செய்யும் .பொந்தினுள் சென்ற பெண்பறவை ஒன்றிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடுகிறது. முட்டையிலிருந்து வரும் குஞ்சுகளுக்கு பாதுகாப்பாக இருக்க படுக்கையைத் தாயார் செய்ய பெண் பறவையானது தனது இறக்கைகளை உதிர்த்து படுக்கை அமைக்கும்.

ஆண் பறவை ஆற்றுப்படுகையிலுள்ள மண்ணை எடுத்து வந்து தமது எச்சிலோடு சேர்த்து உணவளிக்க மட்டும் சிறிய துவாரத்தை விட்டு சுவர் வைத்து மூடிவிடும்!..அப்படி உருவாக்கப்பட்ட சுவாரனது விஷத்தன்மையுடன் இருக்கும், பாம்புகள்கூட நெருங்க முடியாது ஏனெனில் எதிரிகளிடமிருந்து பாதுகாத்து கொள்ளும் தன்மையை இயற்கை அதற்கு கொடுத்திருக்கிறது. ஆண் பறவை கூட்டிலிருக்கும் இணைக்கும்,குஞ்சுகளுக்கும் சத்துநிறைந்த பழங்கள்,கொட்டைகள்,சிறிய வகை ஊர்வனங்கள், சமயத்தில் சிறுபறவைகளைக் கூட கொண்டுவந்து உணவாக  தருகிறது. இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில் உணவுதேடச்செல்லும் ஆண் இருவாச்சியானது வேட்டையினாலோ இதரகாரணங்களாலோ உயிரிழந்து,கூட்டிற்கு திரும்பவில்லையெனில் மொத்த குடும்பமும் அழிந்துவிடும்.

சங்க இலக்கியங்களில் இருதலையன், மலைப்பொங்கன், இருதலைப்பட்சி, மரத்தலையன் என்ற தமிழ்பெயர்களாலும் hornbill என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவது 54 வகையான இருவாச்சிகள் வாழ்கிறது. அதில்இந்தியாவில் 9 வகையும் தென்னிந்தியாவில் 4 வகை மேற்குதொடர்ச்சிமலைகளில் வாழ்வதாக கூறப்படுகிறது.

அடர்ந்தமலைக்காடுகளில் உயரமான மரங்களில் வசிக்கும் பறவைகளைவிட தனித்து காணப்படுவது அது எழுப்பும் ஒலி மூலம் மட்டுமே. ஒரு ஹெலிகாப்டர் பறந்து வருவது போன்ற சத்தம் அப்பறவை வருவதற்கான அடையாளம் ஆகும். அழகே அபத்து என்று சொல்லுவார்கள் அல்லவா அது உண்மைதான் இதன் அழகான இறகுகள், இறைச்சிகளுக்கு  சர்வதேச கடத்தல் சந்தையில் பெரும்மதிப்பு உண்டு.

இந்த இனத்தில் பெரும்பாலான பறவைகள் வேட்டையாடப்பட்டு விட்டன. அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தபறவைகள் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பது வேதனை அழிக்கிறது.

30 முதல் 40 ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய இந்த பறவை பசுமை நிறைந்த காடுகளில் வளரும் நீர்மத்தி, ஆல், அத்தி, வேலம், நாவல், புங்கன், கருப்பாலை மற்றும் இலுப்பை மரங்களின் விதைகள் பரவுவதற்கு இப்பறவை முக்கிய காரணம் என்று சுற்றுசூழல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஏனெனில் இவற்றின் எச்சம் மூலம் மட்டுமே இவ்வகை மரங்கள் முளைக்கும் திறனைப் பெறுகின்றன .இப்பறவை இல்லையெனில் மழைக்கடுகளில் பத்துவகையான மரங்கள் முளைக்காது என்று தாவர ஆய்வாளர்களின் அறிக்கை ஆகும்.

பல்லுயிர் சூழலுக்கு  அதிகம் உதவி செய்யும் இருவாச்சி பறவை  கேரளா மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் மாநில பறவையாக அறிவித்து இருக்கின்றன  அம்மாநில அரசுகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments