நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எப்10

0 649

புவி கண்காணிப்பு ஜிஐசாட்-1 செயற்கை கோளை தாங்கியபடி ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது  2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 5 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

2,268 கிலோ எடை கொண்ட முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன முறையில் புவியை படம்பிடித்து அனுப்பக்கூடிய வகையில் இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டுள்ளது. புவியை குறிப்பிட்ட இடைவெளியில் மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பிக் கொண்டே இருக்கும்.

மேலும் இயற்கை பேரிடர், வேளாண், வனப்பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான தகவல்களையும் இந்த செயற்கை கோள் அளிக்கும். இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் முதல் அதிவிரைவு செயற்கை கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments