புதுச்சேரி சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செய்து தரும்

0 522

புதுச்சேரிக்கு தேவையான சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருக்கிறார்.

புதுச்சேரியில், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டப்பணிகள் குறித்து, முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்கரி, இதனைக் கூறினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி - மகாபலிபுரம், விழுப்புரம் - நாகப்பட்டினம் உட்பட 4 வெவ்வேறு வழித்தடங்களை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவது தொடர்பாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாகத் மகிழ்ச்சி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments