காசிமேட்டில் இரு குழுவுக்கு இடையே மோதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை

சென்னையில் ரவுடிகள் இடையேயான மோதல் குறித்து உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
2 நாட்களுக்கு முன்பு காசிமேட்டில் 8 பேர் கொண்ட கும்பலால் ரவுடி திவாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 குழுவினர் இடையே மோதல் நடக்கவுள்ளதாக முன்பே உளவுத்துறை எச்சரித்தும் திவாகரன் கொலையை தடுக்க காசிமேடு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியன் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments