சர்வதேச நீதித்துறை மாநாட்டில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்

0 469

பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாட்டை தொடங்கி வைக்கிறார். உச்சநீதிமன்ற வளாகத்தின் கூடுதல் கட்டடத்தில் நடைபெறும் மாநாட்டில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

மாலை 7 மணியளவில் அவர் கேல் ரத்னா விளையாட்டுப் போட்டியை காணொலி மூலம் தொடங்கிவைக்க உள்ளார். இன்று முதல் வரும் மார்ச் முதல் தேதி வரை புவனேசுவரில் கேலோ இந்தியா பல்கலைக்கழகம் சார்பிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறஉள்ளன.

நாடு முழுவதும் 150 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3500 தடகள வீரர்களும் வீராங்கனைகளும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

வில் அம்பு, தடகளம், குத்துச்சண்டை ,வாள் வீச்சு, நீச்சல், ஜூடோ , பளுதூக்குதல், மல்யுத்தம், கூடைப்பந்து, வலைப்பந்து, டேபிள் டென்னிஸ் ,ரக்பி, டென்னிஸ் கபடி உள்பட 17 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments