விதவை பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை - பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு

0 646

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாரணாசியை சேர்ந்த அந்த பெண்ணும், பதோகி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் உறவினர் சந்தீப் என்பவரும் கடந்த 2014ம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகிய சந்தீப், கடந்த 2017ம் ஆண்டு அவரை பதோகிக்கு அழைத்து வந்து ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளார்.

அப்போது பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி, அவரது மகன்கள் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் அந்த பெண்ணை பலநாள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments