ஆம்னி பேருந்து வேன் மீது மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

0 1195

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து மினி சுற்றுலா வேன் மீது மோதிய விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, சின்னநடுப்பட்டியில் உள்ள சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது கன்னியாகுமரியில் இருந்து நேபாளத்தைச் சேர்ந்த ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயணித்த மினி வேன், சின்னநடுப்பட்டி பிரிவில் பெங்களூரு செல்வதற்காக சாலை திருப்பத்தில் திரும்ப முயன்றுள்ளது.

அந்த சமயத்தில் திருவனந்தபுரத்தை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. மினி வேனில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.imageகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மினி வேன் சாலை திருப்பத்தில் கவனக்குறைவுடன் திரும்பியதே விபத்துக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments