துரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

0 4982

அரசின் கடனை திமுக ஆட்சி அமைத்த பின்னர் ஸ்டாலின் எப்படி சமாளிப்பார் என்று கவலை தெரிவித்த துரைமுருகனிடம், அப்படி ஒரு நிலை தங்களுக்கு வராது என முதலமைச்சர் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதை சுட்டிக் காட்டி பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், தனது கவலையெல்லாம் அடுத்த முறை திமுக ஆட்சி அமைத்ததும் தங்கள் தலைவர் எப்படி இதை சமாளிப்பார் என்பது தான் என்று கூறினார்.

அப்போது குறிக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை, அப்படி ஒரு நிலை உங்களுக்கு வராது என்று கூறியதால் சிரிப்பலை எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments