காதல் திருமணம் கூடாது என உறுதிமொழி ஏற்க வைத்ததாக கல்லூரி மீது குற்றச்சாட்டு

0 468

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வீர தீர செயலுக்கன தேசிய விருது பெற்ற 12 வயது சிறுமி மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார்.

ஜென் சதவர்தே (Zen Sadavarte) எனும் அந்த சிறுமி அளித்த புகாரில், அமராவதியில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் கல்லூரியில் காதலர் தினத்தை முன்னிட்டு, காதல் திருமணம் செய்ய மாட்டோம் என மாணவிகளை வற்புறுத்தி உறுதிமொழி ஏற்க வைத்ததாக கூறப்படுகிறது.

இயற்கை நீதியை மீறிய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும், கல்லூரி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments