பாஜகவின் புதிய மாநில தலைவர்கள் அறிவிப்பு

0 740

கேரளா, மத்தியப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய பாஜக தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

அதன்படி கேரள மாநில பாஜக தலைவராக கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மாவும், சிக்கிம் மாநில பாஜக தலைவராக தால் பகதூர் சவுகானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வரும் ஜபல்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங்குக்கு பதிலாக, கஜுராகோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஷ்ணு தத் சர்மா அம்மாநில பாஜவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments