திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள் - தமிழக அரசு

0 287

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

விழாக்களின் சிறப்பை நினைவு கூரும் வகையில்  மரக்கன்றுகள் வழங்குவது அதிகரித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை ஊக்குவிக்கும் வகையில் விழாக்கள், பண்டிகைகள் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மலிவு விலையில் தரமான நடவுச்செடிகள், பழச்செடிகள் உள்ளிட்டவை  வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக வட்டார மற்றும் மாவட்ட அளவிலான தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலோ, இ-தோட்டம் செயலி மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் என்றும் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in/horti/tnhorticulture/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments