சொத்து வரி வசூல், அரசியல் கட்சியினருக்கு நீதிபதிகள் கண்டனம்..!

0 566

சென்னை மாநகராட்சியில், சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், 2018-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் அரசு தூங்கி கொண்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுவதற்கு, வரியை உயர்த்தாததே காரணம் எனவும் குறிப்பிட்டனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments