மன அழுத்தம்...! அதிகபட்ச கோபம்...! 29 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்

0 651

தாய்லாந்தில் 29 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரரின் அதிகபட்ச மனஅழுத்தம் மற்றும் கோபத்தை குறைக்க அவனது தாயை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

கோரத் நகரில் நேற்று வணிக வளாகம் ஒன்றில் புகுந்த ஜக்ரபந்த் தோம்மா என்ற ராணுவ வீரர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே சிக்கி இருந்த மக்களை பத்திரமாக மீட்கும்பொருட்டும் ராணுவ வீரனை சரணடைய வைக்கவும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனாலும் பிணையக் கைதியாக பிடித்துவைத்திருந்த மேலும் பலரை கொல்லப்போவதாக மிரட்டியதால் வேறு வழியின்றி அவனை சுட்டுக்கொன்றதாக விளக்கம் அளித்துள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments