பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது

0 625

திருவள்ளூர் அருகே, பிறந்த நாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர், பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலையில் தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ ஒன்று, இணையத்தில் வைரல் ஆகி வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார்,அஜித்குமார், மற்றும் கலைவாணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பொது இடத்தில் கேக் வெட்ட எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதிவாசிகளுக்கு இவர்கள் கொலைமிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments