RECENT NEWS

"படத்தின் ஆன்மாவை போச்சு".. கடுப்பான நடிகர் தனுஷ்.. AI ‘ராஞ்சனா’ எப்படி இருக்கு?

BIG STORIES

”மாட்டிகிட்டீங்களே பாண்டியம்மா”.. “ரோபோ சங்கர் மகள் சொல்வது பொய்”! Fact Check-ல் சிக்கிய இந்திரஜா..

Jul 11, 2025 12:51 PM

156

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.. இவர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்திருப்பார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோஷியல் மீடியாக்களில், வீடியோகளைப் போட்டு கல்லா கட்ட ஆரம்பித்தார்.

இதற்கிடையே தனது உறவினரான கார்த்திக் என்பவரை, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார் இந்திரஜா. இவர்களது திருமண நிகழ்வுகள் அனைத்துமே தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. திருமணம் என்ற பெயரில் இருவர்கள் கொடுத்த ஓவர் ஹைப்பால், நெட்டிசன்கள் சிலர் அதனை கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து, ஏதோ ஒரு தயாரிப்புக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ப்ரோமோஷன் செய்வதுபோன்ற வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டுவந்தார் இந்திரஜா. அப்படி அவர் சமீபத்தில் போட்ட ஒரு வீடியோ தான் அவரை சிக்கலில் தள்ளியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், இன்ஸ்டா பிரபலம் இந்திரஜா, தனது 6 மாத குழந்தையை ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு தூக்கி சென்றிருக்கிறார்.

அந்த நிறுவனமானது குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை கொடுக்கும் கம்பெனி என்று சொல்லப்படுகிறது.

அந்த நிறுவனத்துக்குத்தான் தனது குழந்தையை தூக்கி சென்று சில பயிற்சிகள் கொடுக்கப்படும் வீடீயோவை ஷேர் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்த பலரும், 6 மாத குழந்தையை வைத்து சம்பாதிக்க வேண்டுமா? என இந்திரஜா மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இதனால் இந்திரஜா கைதுசெய்ய கூட படலாம் என கூறப்பட்டுவந்தது.

இந்த நிலையில், தனது ஆடியன்ஸ்களை ஆறுதல் படுத்துவதற்காக, இன்ஸ்டா பிரபலம் இந்திரஜாவும், அவரது அன்பு கணவர் கார்த்தியும் இணைத்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் அந்த தனியார் நிறுவனத்திற்கு ரீ ஃப்ரோமோசன் கொடுத்திருகின்றனர்.

அதில், குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் தற்போது குறைந்துள்ளதாகவும் அளந்து விட்டிருக்கின்றனர். மேலும் தங்களை பற்றி வீடியோவில் பேசிய வழக்கறிஞருக்கே பயிற்சி தேவை என்று அட்வைஸும் கொடுத்திருகின்றனர்.

“என் பையன நான் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது இல்ல.. பண்ணவும் மாட்டேன் என இந்திரஜா சொல்லும்போதே!.. ஏன் பயன்படுத்துனா என்ன தப்பு? நடிகர் குடும்பத்திலிருந்து வந்த குழந்தை நடிக்க தான் விடுவாங்கனு..பொங்கிருந்தார் இந்திரஜா கணவர் கார்த்தி.

”நாங்க பண்ணது தப்பே இல்ல.. எங்களுக்கு எந்த Offical calls-ம் வரல”.. என மூச்சி புடிக்க அரை மணி நேரம் பேட்டி அளித்த இவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check) ஒரு பெரிய ஆப்பாக வைத்திருக்கிறது. அவர்கள் பாணியிலே தவறுகளை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.

முதல் பொய் : 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலத்துறை தான் நவசேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது என கூறிய இந்திரஜாவும், அவரது கணவர் கார்த்தியும். அப்படி பார்த்தால் மத்திய அரசை தான் கைதுசெய்ய வேண்டும் என கிண்டல் செய்திருகின்றனர்.

இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என மறுத்த தமிழ்நாடு அரசின் Fact Check குழு, நவசேத்னா திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளின் மூளை பயிற்சிக்கு பயிற்சி கொடுக்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை என மறுப்பு தெரிவித்து, இந்திரஜா மற்றும் கார்த்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

அதோடு மத்திய அரசின் "Early childhood stimulation" என்ற வார்த்தையை மட்டும் வைத்துகொண்டு, பச்சிளம் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க மத்திய அரசே திட்டம் வைத்திருப்பதாக, இப்படி கட்டமைத்து கூறி தவறான தகவல்களை பரப்பிவருவதாக கூறியிருக்கிறது.

இரண்டாவது பொய் : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக, ”புள்ளி விவர பாபு” போல பேசியிருந்தார் இந்திரஜா கணவர் கார்த்தி.

அதற்கு, பதிலளித்துள்ள Fact Check குழு, தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறனோ, மூளை வளர்ச்சியோ குறைந்ததாக எந்த தரவுகளும் இல்லை. இந்த தகவல் அவர்கள் குறிப்பிடும் நவசேத்னாவிலும் இல்லை என இருவர் கண்ணத்திலும் ஓங்கி அடித்திருக்கிறது.

மூன்றாவது பொய் : மத்திய அரசு இந்த Right-Brain activation பயிற்சி முறையை செயல்படுத்த தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது என அளந்துவிட்டிருகின்றனர்.

அதற்கும் விளக்கமளித்துள்ள Fact Check குழு, மத்திய அரசாங்கம் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த Right-Brain activation அல்லது ஹெகுரு போன்ற பயிற்சிகளை ஊக்குவிக்கவோ, நடைமுறைப்படுத்தவோ அரசு எந்தத் தொகையும் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளது.

நான்காவது பொய்: பிறந்த குழந்தையை கூட அங்கன்வாடியில் சேர்க்க சொல்லி, மத்திய அரசு ஊக்குவித்துவருவதாக வாய்க்கு வந்ததை கூறியிருந்தார் இந்திரஜா.

ஆனால் அதனை மறுத்த Fact Check குழு, இது திரிக்கப்பட்ட தகவல், நவசேத்னா குழந்தைகளை மூன்று வயது வரை வீட்டில் வளர்ப்பதையே ஊக்குவிக்கிறது. குழந்தையைப் பராமரிக்க வாய்ப்பில்லாத நிலையில், அங்கன்வாடியில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கிறது என இந்திராவுக்கு குட்டு வைத்திருக்கிறது.

ஐந்தாவது பொய்: ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை. அது ஒரு Activity என சும்மா அடித்துவிட்டிருந்தார் இந்திரஜா. ஆனால் அதற்கும் ஒரு விளக்கத்தை Fact Check குழு அளித்திருக்கிறது.

சென்னையில் செயல்படும் அந்த ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் 'JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION' என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். எனவே தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் குழந்தையை வைத்து இந்திரஜா வதந்தி பரப்பியதும், ப்ரோமோஷன் செய்ததும் உறுதியாகியுள்ளது. ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்து பொய்களை சொல்லி தற்போது வசமாக சிக்கியிருக்கிறார்கள் இந்திரஜா - கார்த்தி தம்பதி.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தூத்துக்குடியில் தயாராகும் வியட்நாமின் மின்சார கார்.. மக்களை கவர்ந்தால் வெற்றி..! வின் பாஸ்ட்... விலை என்ன தெரியுமா ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies