BIG STORIES
அதிவேகமாக சுழலும் பூமி.. உலக வரலாற்றிலேயே முதன்முறையாக குறையும் நேரம்.. “நல்லதல்ல” எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Jul 11, 2025 12:55 PM
158
உலக வரலாற்றிலேயே மிகக்குறைந்த நேரம் கொண்ட நாளாக, பதிவாகியிருப்பது, பெரும் ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திவருகிறது.
அதாவது, ஒருநாள் என்பது 24 மணி நேரம் அல்லது 86,000 வினாடிகள் கொண்டதாக இருக்கும். ஆனால், கடந்த ஜூலை 9 ஆம் தேதி 24 மணிநேரத்தில் 1.3 முதல் 1.51 கண நேரம் அதாவது மில்லி செகண்ட் குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
உலகம் சுழல்வது, 1970 ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டுவருகிறது. ஆனால், 2020 ஆம் ஆண்டு முதல்தான், பூமி வேகமாக சுழல்வது பதிவானது. ஆனால், முதல் முறையாக, நேரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரம் என்ற அளவு, திடீரென குறைந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள் அளித்த விளக்கம் இதுதான்.
“பூமியின் மையக்கருவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அல்லது பூமிக்கு மிக அருகிலுள்ள சந்திரன் வந்திருப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக இருந்திருக்கலாம்.
ஆனால், இப்படி பூமியின் சுழலும் வேகம் அதிகரிப்பது நல்லதல்ல” எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறவர்கள், ”வரும் வாரங்களிலும் பூமி வேகமாக சுழலும் நிகழ்வுகள் ஏற்படலாம். அதனால், ஜூலை-22 மற்றும் ஆகஸ்ட்-5 தேதிகளில் இதேபோன்று நேரம் குறையலாம்” எனவும் கூறி தலை சுற்றவைக்கிறார்கள்.
மேலும், பூமிக்கு மிக அருகே சந்திரன் வந்திருப்பது, பூமியின் சுழலும் அமைப்பில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதனால், பூமி சற்று வேகமாக சுழன்று, ஒரு நாளின் நேரத்தை குறைத்திருக்கலாம். நமது பூமியானது ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
பூமியின் சுழலும் தன்மையில் சூரியன், சந்திரன் போன்ற பல காரணிகள், புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, பூமி சற்று வேகமாக சுழன்றிருக்கலாம் அல்லது சற்று மெதுவாக சுழலலாம்.
இதனால், அந்த நாளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இப்படி, 24 மணி நேரத்திலிருந்து குறைந்த அந்த நேரத்தை, பூமியானது அடுத்து வரும் நாட்களில் ஈடுகட்டுமா? என்றும் பூமிபந்து நேரத்தை அளவிடும் விஞ்ஞானிகள் எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகில் நிலவு வந்திருப்பதால், பூமியின் சுழலும் வேகம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்காலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.
இதற்கு முன் எப்போதும் நிகழாத வினோத நிகழ்வும் என்றும் விஞ்ஞானிகள், பிரமித்துவருகிறார்கள். அதேபோல், நிலவு தூரமாக சென்றபிறகு பூமியின் சுழற்சி வேகம் குறையலாம்.
அப்போது, நீண்ட நேரம் நாளாக வரலாற்றில் பதிவாகலாம் என்று கூறப்படுகிறது. ஜூலை-22, ஆகஸ்ட் -5 ஆம் தேதிகளில் நேரங்களில் நிகழப்போகும் மாற்றத்தைக் காண பலரும் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu