எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கு : சையது அலியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை

0 516

எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சையது அலியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் என்ஐஏ அதிகாரி விஜயகுமார் தலைமையிலான 5 அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட காஜா மைதீன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவுக்கு தற்போது தமிழ்நாடு நேஷனல் லீக் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சையது அலி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக அவ்வப்போது தங்கள் இயக்கத்தின் பெயரை மாற்றி வந்ததாகவும், தென்னிந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவது தொடர்பாக 15 பேரும் அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் சையது அலி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. சிலர் ஐ.எஸ். இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தீவிரவாத இயக்கம் தொடங்கியிருப்பதாக சையது அலி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments