கிராம சபையில் 5 ஆம் வகுப்பு மாணவியின் துணிச்சலான பேச்சால் கிடைத்த பேருந்து வசதி ! குவியும் பாராட்டு

0 635

மதுரை அருகே கிராம சபையில் துணிச்சலுடன் பேசி, பள்ளி செல்ல பேருந்து வசதி பெற்று தந்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது.

image

மீனாட்சிபுரம் கிராமத்தில் ஜனவரி 26 ஆம் தேதி நடந்த கிராம சபைக்கூட்டத்துக்கு சக மாணவிகளுடன் வந்த சஹானா என்ற மாணவி, 6 ஆம் வகுப்பு படிக்க 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாயாண்டிபட்டி உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் ஆனால் அதற்கு போதிய பேருந்து வசதியில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தார்.

image

மாணவியின் இந்த துணிச்சலான செயல் சமூகவலைதளங்களில் பரவி பலரது பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மாணவியின் கோரிக்கையை ஏற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாயாண்டிபட்டி வழியாக மீனாட்சிபுரம் வரை பேருந்து இயக்கப்படுகிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments