மனித முக ஆட்டுக்குட்டியை கடவுள் என வணங்கும் கிராமத்தினர்
ராஜஸ்தானில் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள நிமோடியா என்ற கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. பிறக்கும்போதே அந்தக் குட்டி நீண்ட காதுகளுடன் இருந்தது. அதன் முகம் மனித முகத்தின் வடிவில் காணப்பட்டதால், நிமோடியா கிராமத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். தற்போது கடவுளின் அவதாரமாகப் பார்க்கப்பட்டு வரும் இந்த ஆட்டுக் குட்டியை நிமோடியாவைச் சுற்றியுள்ள கிராமத்தினரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
Comments