SSI கொலை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..

0 335

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை நாளை மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகியோர் 3 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படாத நிலையில், அவர்களை 30 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி போலீசார் மனு அளித்தனர்.

இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், போலீசாரின் மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments