2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு

0 683

ஐசிசியின், கடந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரர் ரோகித் சர்மா, ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக தேர்வாகியுள்ளார். சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் பேட் கமின்ஸும், அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்த வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்த ரசிகர்களைத் தடுத்தமைக்காக விராட் கோலிக்கு, ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது (Spirit of Cricket) அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாகவும் கோலியே தேர்வாகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments