திருமணமான பெண் இறந்தால், சட்டப்பூர்வ வாரிசுகள் யார்? உயர்நீதிமன்றம் விளக்கம்

0 662

திருமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த பி.வி.ஆர்.கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் அவரது தாயாரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆண் இறந்துவிட்டால் மனைவி, குழந்தை மட்டுமின்றி அவரது தாயாரும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கருதப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

மணமான ஆணுக்கு மட்டுமே இது பொருந்தும் எனக் கூறிய நீதிபதி, பெண்கள் இறந்தால் அவரது கணவர், குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசாக முடியுமென கூறினார்.

மேலும் விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததோடு, அவரது தாயார் பெயர் நீக்கப்பட்ட புதிய சான்றிதழை பிப்ரவரி 15ம் தேதிக்குள் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments