ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
BIG STORIES
பூசாரிக்கு விழுந்த பூஜை.. ரகசிய தரிசனத்தில் புகுந்து அடி கொடுத்த வீட்டுக்காரர்..!
Jul 10, 2025 12:44 PM
224
பூசாரிக்கு விழுந்த பூஜை.. ரகசிய தரிசனத்தில் புகுந்து அடி கொடுத்த வீட்டுக்காரர்..!
சென்னை வடபழனியில் தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளை வழங்குவதாக கூறி அழைத்துச் சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை பெண்ணின் கணவன் கையும் களவுமாக பிடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்த போது, பூசாரி அசோக் பாரதி என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
அந்தப் பெண் தனது குடும்ப பிரச்சினைகளை அவரிடம் சொல்லி வேதனை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
பூசாரி அசோக் பாரதி தீய சக்திகளை அழிக்க மந்திரித்த ருத்ராட்சம் மணிகளை வழங்குவதாக கூறி வடபழனி சிவன் கோவிலுக்கு அந்தப் பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
கோயில் நடை மூடப்பட்டிருந்ததால் அதுவரை அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்ட வரலாம் என பூசாரி அசோக் பாரதி கூறியதாகவும், அதன்படி அந்தப் பெண்ணும் அவருடன் சென்று இருக்கிறார்.
அந்த பெண்ணை யாருமில்லாத அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று மனம் விட்டு பேசலாம் என்று கூறி இருக்கிறார்.
அப்படி பேசிக் கொண்டிருந்தபோது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பவத்தன்று, தனது மனைவியின் சமீபத்திய நடத்தையில் சந்தேகம் அடைந்த அந்த பெண்ணின் கணவர் அவரை பின்தொடர்ந்து சென்று, பூசாரியுடன் தனது மனைவி ஒரு வீட்டில் தங்கி இருப்பதை அறிந்து கையும் களவுமாக பிடித்துள்ளார்
பூசாரியை நாலு சாத்து சாத்தி, இருவரும் ஒன்றாக அந்த வீட்டில் இருப்பதை வீடியோ எடுத்துக் கொண்ட அந்த பெண்ணின் கணவர், இருவரிடமும் பத்து லட்ச ரூபாய்க் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வடபழனி காவல் நிலையத்தில் இரு புகார்களை அந்தப் பெண் அளித்துள்ளார்.
ஒரு புகாரி கோவில் பூசாரி தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மற்றொரு புகாரில் தனது கணவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் கொடுத்த இரு புகார்கள் குறித்தும் வடபழனி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக கணவனது செல்போனில் இருந்த வீடியோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பூசாரியை வீடு புகுந்து தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
கோவிலுக்கு சென்றோமா.. பூஜை வைத்தோமா ... சாமி கும்பிட்டோமா.. என்று வராமல் பெண்கள் தங்கள் குடும்ப அந்தரங்க விவகாரங்களை மூன்றாம் நபரிடம் தெரிவித்தால் என்ன மாதிரி விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றும் ஒரு சான்று.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu