ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - எம்.எல்.ஏ கார் மீது கல்வீச்சு

0 305

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

விசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி ஆகிய இடங்களில் தலைநகரை அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வாரங்களாக எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியின் காரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது எம்எல்ஏவின் பாதுகாப்பு வீரர்கள் அவர்களை தடுக்க முயன்றதை அடுத்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments