சபரிமலை கோவில் வருகிற 14-ஆம் தேதி இரவு நடை அடைப்பு இல்லை

0 371

சபரிமலை கோவிலில் மிக அபூர்வமாக வருகிற 14ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் பூஜை நடைபெறும்.

இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு வருகிற15 அதிகாலை 2:09 மணிக்கு கடக்கிறது. இதனால் 14 இரவு 11 மணிக்கு கோவில் நடையை அடைக்கப்படாது என்றும், தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம் போர்டு கூறியுள்ளது.

வருகிற 15 அதிகாலை 2:09 மணிக்கு மகரசங்கரம பூஜை நடந்த பின்னர் அதிகாலை 2:30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் என்றும்,அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments