காங்கிரஸுக்கு சிவசேனா கண்டனம்

0 1239

அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வன்முறையில் ஈடுபடுவதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் பதவி கிடைக்காத அதிருப்தி காங்கிரசில் மேலோங்கி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.சங்க்ராம் தோபாட்டின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். பிரனிதி ஷிண்டே என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.சோனியாவுக்கும், ராகுலுக்கும் ரத்த கடிதம் எழுதி பரபரப்பை அதிகரித்தார். இந்த சம்பவங்களை சிவசேனாவின் சாம்னா பத்திரிகை கடுமையாக சாடி உள்ளது. 

தங்களைப் போல் அமைச்சரவை விரிவாக்கத்தில் மற்ற 2 கட்சிகளும் கட்டுப்பாட்டுடன்  நடந்து கொள்ளவில்லை என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments