வினாத்தாள்கள் வெளியாகாமல் தடுக்க புதிய நடைமுறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

0 236

பள்ளி தேர்வுகளில் இனிமேல் வினாத்தாள் வெளியாகாத அளவிற்கு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம்  நம்பியூர் வட்டாரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி தேர்வுகளில் இனிமேல் வினாத்தாள் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளது என்றார். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி அதிகாரி நியமிக்கப்படவுள்ளனர் என்று அவர் கூறினார். பாலியல் தொல்லைகளை தடுக்க பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments