குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்கும்படி மம்தா வேண்டுகோள்

0 215

மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்கும்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள அவர் வன்முறையைத் தூண்ட வேண்டாம் என்று போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மம்தாவின் வீடியோ பேச்சு ஒன்றை வங்காள காவல்துறை வெளியிட்டது.

சாலைகளை மறித்து சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்றும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு எந்தவிதமான குந்தகத்தையோ பொதுச்சொத்துகளுக்கு சேதத்தையோ ஏற்படுத்த கூடாது என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். 

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments