அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்

0 292

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகம், கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறினார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.  வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரி மழை அளவு 44 செ.மீட்டர் என்ற புவியரசன், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments