சிறப்பாக இயங்கிய குளிர்கால கூட்டத் தொடர்

0 247

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபா 116 சதவீதமும், ராஜ்யசபா 99 சதவீதம் செயல்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம்18 ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.  கூட்டத் தொடரின் இறுதி நாளில் அவை செயல்பாடுகள் குறித்த புள்ளி விபரத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமர்ப்பித்தார்.

இதன்படி, குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை 116 சதவீதமும், மாநிலங்களவை 99 சதவீதமும் செயல்பட்டுள்ளது. மக்களவையில் 14 மசோதாக்களும், மாநிலங்களவையில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தொடரில் மக்களவை 108 மணி நேரம், 33 நிமிடங்களும், மாநிலங்களவை 107 மணி நேரம் 11 நிமிடங்கள் செயல்பட்டுள்ளது. மொத்தம் 11 மணி நேரம் 47 நிமிடங்கள் அமளி, குறுக்கீடுகளால் வீணடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments