மகாராஷ்டிரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் -மக்கள் அச்சம்

0 158

மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில்  அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இன்று காலை  5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 3 புள்ளி 9 ஆக பதிவானது.   துண்டல்வாடி என்ற கிராமத்தில்  வெள்ளி பிற்பகலில் இருந்தே 2 முறை லேசான நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இவை ரிக்டர் அளவையில் தலா 3 புள்ளி 4  ஆக பதிவாகின.  எனினும் இந்த நிலநடுக்கங்களால் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே இந்த கிராமத்தில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Watch Polimer News Online : https://polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments