நிர்பயா கைதிகளை தூக்கிலிடத் தயார் - மீரட் சிறையின் தூக்கிலிடும் பணியாளர் சம்மதம்

0 153

நிர்பயா கொலைக் குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற தாம் தயாராக இருப்பதாக, மீரட் சிறையின் தூக்கிலிடும் பணியாளர் பவான் ஜல்லாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் 4 பேர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். டெல்லி திஹார் சிறையில் உள்ள இவர்களில் வினய் சர்மாவின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் உள்ளது.

அது எந்த நேரமும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றொரு குற்றவாளியான அக்ஷய் சிங் தாக்கூரின் மறுசீராய்வு மனு வரும் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திஹார் நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக மீரட் சிறையில் இருந்து தூக்கிலிடும் பணியாளரை அனுப்புமாறு, உத்தரப் பிரதேச சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments